சவுதி அரேபியாவில் இயங்கும் இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் ஏற்பாடு; தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உதவி

அரசியல் அரபு நாடுகள் இந்தியா உலக தமிழ் பள்ளிகள் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்க்கல்வி தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை முதன்மை செய்தி

சவுதி அரேபியாவில் உள்ள கல்வி நிலையங்களில் குறிப்பாக இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்தும் மேலும் இதனால் தமிழை விருப்பப் பாட மொழியாக எடுக்காமல் வேறு மொழியை விருப்ப பாட மொழியாக எடுத்து விடுவார்களோ என்று அஞ்சிய சவூதி அரேபியா NRTIA நிர்வாகிகளான முதன்மைச் செயலாளர் மயிலாடுதுறை வெங்கடேஷ், துணை அமைப்பாளர் திருச்சி ஆரிஃப் மக்பூல், முகவை சீனி முகம்மது, துறையூர் கமால் பாட்ஷா ஆகியோர் மூலம் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் சவூதி அரேபியா மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை கனிவுடன் ஏற்ற மான்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மான்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சவுதி அரேபியா தம்மாம் பன்னாட்டு பள்ளியில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்கும் மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் புத்தகங்களை வழங்கினார்கள். இந்த புத்தகத்தை தாயகத்திலிருந்து சவுதி அரேபியாவிற்கு கொண்டு செல்ல எஸ்டி கார்கோ சேர்மன் ஜனாப் அன்சாரி அவர்கள் உதவியுடன் புத்தகம் சவுதி அரேபியாவிற்கு இலவசமாக கொண்டுவரப்பட்டு கடந்த 04-10-2023 தேதியில் தமாம் இந்திய பன்னாட்டு பள்ளியில் அதன் சேர்மன் மூஸாம் ததன் முன்னிலையில் தமிழக அரசு வழங்கிய புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கடல் கடந்தாலும் சிறிதும் தொய்வின்றி தமிழ் மொழியின் சிறப்பை தரணியெங்கும் பரப்பிட தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சியையும் மாணவர்களுக்கு கல்வியே சிறந்த அறிவாயுதம் என்ற முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் முழக்கத்தையும் முன்னிறுத்தி நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்து.
இந்த நிகழ்ச்சியில் சவுதி அரேபியா NRTIA நிர்வாகிகளான முதன்மைச் செயலாளர் வெங்கடேஷ், சமூக சேவகர் நாஸ் வக்கம், NRTIA துணை அமைப்பாளர் ஆரிஃப் மக்பூல், பொருளாளர் கமால் பாட்ஷா, முகவை சீனி முஹம்மது, எஸ் டி கார்கோ சேர்மன் அன்சாரி, யுனிவர்சல் இன்ஸ்பெக்சன் கம்பெனி நிறுவனர் பதுருதீன் அகமது , NRTIA உறுப்பினர்களான யூனுஸ், முகமது பாரூக் மற்றும் பிரமிட் ஈஸ்ட் கம்பெனி நிறுவனர் அப்பாதுரை, IWF செயலாளர் பாபா சுலைமான் மற்றும் இந்திய பன்னாட்டு பள்ளியின் முன்னாள் சேர்மன் திருநாவுக்கரசு, NRTIA அப்கேக் நிர்வாகி சிவா, இந்திய பன்னாட்டு பள்ளி சேர்மன் மோசம் தத்தன், அப்துல் சத்தார், சுரேஷ் பாரதி மற்றும் இந்தியப் பன்னாட்டுப் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கப்பெறாத தமிழ் புத்தகம் இலவசமாக கிடைக்கப்பெற்றதால் மாணவர்களின் பெற்றோர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *