தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்து கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சராக டிச.7ஆம் தேதி ரேவந்த் ரெட்டி பதவியேற்கிறார். மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் உள்ளிட்டோர் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 65 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கவர்னருக்கு அனுப்பினார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த்ரெட்டி தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

