சென்னை புது கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது; வரும் ஜூலை 30ஆம் தேதி இம்முகாம் நடைபெறும்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வேலைவாய்ப்புச் செய்திகள்

சென்னை New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இளைஞர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை Association of Muslim Professionals சார்பாக மாபெரும் 80-வது வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 125 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. மேலும், 3000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமின் மூலம் 1000-க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இதன் மூலம் உருவாக்கப்பட
உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமை முன்னிட்டு New College வளாகத்தில் அக்கல்லூரியின் வேலைவாய்ப்பு துறையின் தலைவர் அன்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சனிக்கிழமை நடைபெற உள்ள Association of Muslim Professionals சார்பாக நடத்தப்படும் 80-வது வேலைவாய்ப்பு முகாமில், பங்கேற்க இதுவரைக்கும் 3000 பேர் பதிவு செய்துள்ளனர்.இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் வரை பதிவு செய்யலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் 1330 பேருக்கு வேலை கொடுத்துள்ளோம்.
இதற்கு முன்பதிவு இலவசம். சனிக்கிழமை அன்றே கூட நேரில் வந்து கூட வேலை பெற்றுக்கொள்ளலாம். இந்த முகாம் காலை 10:00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 வரை நடைபெறகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் இது வரைக்கும் 100 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது. இன்னும் 30 நிறுவனம் பதிவு செய்ய உள்ளன. இந்த முகாம் வைக்க காரணம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தான். கொரோனாவிற்கு பிறகு எல்லோருக்கும் வேலை தான் முக்கியமாக இருக்கிறது
இந்த முகாம் மூலம் தவறாமல் 1000 பேருக்கு வேலை கிடைக்கும். இந்த முகாமிற்கு எல்லா மாநிலம் இளைஞர்களும் பங்கேற்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த முகாம் தமிழ் நாடு இளைஞர்களுக்கு தான் அனுமதி. முகாமில் IT தொழில் நிறுவனங்கள் உணவகம் மருத்துவ மனை உள்ளிட்ட நிறுவனங்கள்பங்கேற்க உள்ளன. இந்த முகாம் மூலம் கிராம புற இளைஞர் வாய்ப்பு கிடைக்க வேண்டும் அதனால் தான் செய்தியாளர் கூட்டம் வைத்தோம். இந்த முகாமில் பங்கு பெற லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். Phd படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது உறுதி. இவ்வாறு New College வேலைவாய்ப்பு துறையின் தலைவர் அன்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.