தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க முடிவு; தமிழக அரசு ஆணை

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

2022-2023-ஆம் ஆண்டு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 வழங்கப்படும். அதேபோல தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். அத்துடன் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 வழங்கப்படும். இதற்காக அரசுக்கு மொத்தமாக 167 கோடியே 68 லட்ச ரூபாய் செலவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்போடு சேர்த்து ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடமும் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இந்த வருடமும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *