217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்; ஜெர்மனியில் நடந்த வினோதம், மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளித்த சம்பவம்

அரசியல் உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் கோவிட் 19 செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி வினோதங்கள்

ஜெர்மனியில் 62 வயதான நபர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜெர்மனியின் மாக்டேபர்க் பகுதியைச் சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவர் 29 மாதங்களில் 217 தடவை, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், கடந்த ஆண்டு நவம்பர் வரை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வந்துள்ளார். அந்த மனிதரின் உடலில் நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரித்திருந்தாலும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவோ குறையவோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *