சவுதி அரேபியாவில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி; வெளிநாடு வாழ் இந்திய தமிழர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்த தமிழர்கள் சங்கமம்

அரசியல் அரபு நாடுகள் இந்தியா உலகம் சுற்றுலா செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை வரும் நிகழ்ச்சிகள்

சவுதி அரேபியா தமிழர்கள்
சங்கமித்த இஃப்தார் நிகழ்ச்சி. சவுதி அரேபியா திமுக அயலக அணி மற்றும்
NRTIA வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் நலச் சங்கம், ஒருங்கிணைந்து கடந்த 23-03-2024 அன்று மாலை தமிழர்கள் ஒன்று கூடிய இஃப்தார் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் NRTIAவின் கிளைகள் ஒருங்கிணைப்பாளர் முகவை சீனி முகம்மது, பொருளாளர் துறையூர் கமால் இணைந்து இருவரும் ஒருங்கிணைத்தார்கள்.
திமுக மூத்த உறுப்பினர் AST சிவக்குமார் மற்றும் கள்ளக்குறிச்சி ஃபாருக் மற்றும் திருச்சி யூனுஸ் சிறப்பு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யுனிவர்சல் நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர் பக்ருதீன் அப்துல் மஜீத் அவர்கள் கலந்து கொண்டார். சவுதி அரேபியா திமுக அயலக அணி
செயலாளர் அபூ ரயான் நன்றியுரை ஆற்றினார். கேரளா அமைப்பிலிருந்து நாசு சவுக்கத் அலி கலந்து கொண்டார். தமுமுக நிர்வாகிகள் மற்றும் முத்தமிழ் மன்றம் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இருந்து கலந்து கொண்டனர்.
ஏர்போர்ட் கணேசன், சென்னை இம்ரான், யூனுஸ், சென்னை ஜியா மற்றும் அப்துல் ரஹ்மான், ரிஷி உணவகம் ஷாஹுல்
முகவை யாசர், முகவை சபிக், ஆசிரியை ஃபரீதா, சென்னை அக்பர், சவுதி அஞ்சப்பர் உணவகம், சவுதி செட்டிநாடு உணவகம்,
தாஜ் உணவகம், சவூதி அரேபியா தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல தமிழ்மன்ற அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு சவுதி அரேபியா கிழக்கு மண்டல NRTIAவின் சமுதாய பணியையும் பாராட்டி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *