தமிழ்தமிழ்நாடு பிரீமியர் லீக் ஜூலை 5ஆம் தேதி தொடக்கம்; வெற்றி பெறும் அணிக்கு 50லட்சம் பரிசு

இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் (நத்தம்) ,சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொள்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக்கில் மோதும். லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும். இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 50 லட்சமும், 2-வது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 30 லட்சமும், 3-வது மற்றும் 4-வது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *