உலக பட்டினி குறையீடு பட்டியல் வெளியீடு

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

உலக நாடுகளில் பசியின் அளவை குறிக்கும் கணக்கெடுப்பில் இந்தியாவின் பசி நிலைமையைப் பற்றிய தகவலின் அடிப்படையில், 127 நாடுகள் கொண்ட பட்டியலில் கடந்த ஆண்டில் 111ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகளாவிய பசியின் அளவை கண்காணிக்க ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தை இறப்பு போன்ற அடிப்படைகளைப் பயன்படுத்தி சர்வதேச பட்டினி குறியீடு உருவாக்கப்படுகிறது. 136 நாடுகளில் கணக்கெடுக்கப்பட்ட பட்டினிக் குறியீட்டின் அடிப்படையில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதநேய அமைப்பான கன்சர்ன் ஓல்டுவைட் மற்றும் ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர்லைப் ஆகியவை 19ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளன. இதன் மூலம், நம் இந்திய நாட்டு மக்களில் 13.7 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5 சதவிகிதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், அதில் 18.7 சதவிகிதம் பேர் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். 2.9 சதவிகிதம் குழந்தைகள் 5 வயது நிறைவடைவதற்கு முன்பே இறப்பதும் தெரியவந்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *