சென்னை ஈசிஆர் கடற்கரை இரவுநேரங்களில் நீல நிற அலைகளாக தோன்றிய தருணம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வினோதங்கள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடல் அலையில் பல வண்ணங்கள் உருவானதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை போன்ற கடற்கரை பகுதிகளில் வார இறுதி நாட்களில் மக்கள் கூடுவது வழக்கம். இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில், கடலில் சீரியல் லைட் போட்டது போல பல வண்ணங்கள் தோன்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கடற்கரைக்கு வந்த மக்கள் அலையில் பல வண்ணங்கள் தோன்றியதை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதை தானும் கண்டு ரசித்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு வகையான கடற்பாசி என பாலவாக்கம் மீனவர்கள் கூறினர்.
மேலும் கடல் அலையில் இதுபோன்று கடற்பாசி தோன்றும் போது கடலில் குளிப்பது ஆபத்தும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *