சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு புதிய 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.

சிறப்பு செய்திகள் தமிழ்நாடு நீதி மன்றம்

தமிழக அரசு , சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராகி வாதிடுவதற்காக ஏற்கெனவே தலைமை வழக்கறிஞர்கள், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மாநில அரசு ப்ளீடர் மற்றும் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதியதாக 2 பேரை கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக நியமிக்க தமிழக அரசின் பொதுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.அதற்கேற்ப, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் நீண்டகால உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டத்துறை மாநிலத் தலைவருமான கே. சந்திரமோகன் மற்றும் வழக்கறிஞர் எம். சுரேஷ்குமார் ஆகிய இரண்டு பேர் புதிய கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கே. சந்திரமோகன் அவர்கள் அரியலூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர். கருப்பையாவின் மகன் ஆகும். மேலும், அவர் பார் கவுன்சில் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். எம். சுரேஷ்குமாரின் தந்தை முத்தையா, மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *