உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.அப்போது அவர் கூறுகையில், தேவைப்படும் மக்களுக்கும், அறிந்திராத அல்லது சந்திக்காதவர்களுக்கும் சேவை செய்வது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் அனுபவமாகும் எனக் கூறினார். சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிபதிகள் சந்திர சூட் அவர்களுக்கு அன்பான பிரியாவிடை அளித்தனர். அந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (SCBA) தலைவர் கபில் சிபல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அவர்களின் பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவித்துக் கூறிய தலைமை நீதிபதி, “என்னைத் தொடர்ந்து வழிநடத்துவது என்னவென்று கேட்டீர்கள். இந்த நீதிமன்றமே எனக்கு வழிகாட்டியாக இருக்கும்” என்றார். எதையும் கற்றுக்கொள்ளாத, சமூகத்திற்கு சேவை செய்ய வாய்ப்பு இல்லாத ஒரு நாளும் இல்லை. தேவைப்படும் நபர்களுக்கு, சந்திக்காதவர்களுக்கு, தெரியாதவர்களுக்கு சேவை செய்வது, அவர்களை நேரில் சந்திக்காமல் செய்யும் சேவையை விட மேலான உணர்வு எதுவும் இல்லை. இளம் சட்ட மாணவராக நீதிமன்றத்தின் கடைசி வரிசையில் அமர்ந்த நாள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. நீதிமன்றத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நாளும், சட்ட அறிவு மற்றும் தனிப்பட்ட நுண்ணறிவு ஆகியவற்றைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது. அந்த நாற்காலியில் அமர்வதன் மூலம் வந்த பொறுப்பை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். ஆனால், இறுதியில், இது தனிநபரைப் பற்றியது அல்ல, அது நிறுவனம் மற்றும் காரணத்தைப் பற்றியது. நாங்கள் இங்கு நீதியை நிலைநாட்டுகிறோம்.சஞ்சய் கண்ணா, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளவர், நீதியின் வழங்கலில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளவர். அவர் நீதிமன்றத்தை சமமான அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் வழிநடத்துவார் என்பதில் நான் வழக்கறிஞர் சமூகத்திற்கு உறுதியளிக்கிறேன். நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

