சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் 263 கோடி வசூல் செய்து அசத்தல்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் 14 நாட்களில் உலகளவில் ரூ.263 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார்.
மேலும், நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அமரன்’ திரைப்படம் வெளியானது. திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு வாரங்களாகியும் அமரன் திரைப்படம் வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை பார்த்த அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. வெளியான 14 நாட்களில் ‘அமரன்’ திரைப்படத்தின் வசூல் உலகளவில் ரூ.263 கோடியை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *