நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்; கப்பல் நிறுவனம் அறிவிப்பு

அரசியல் இந்தியா இலங்கை உலகம் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வானிலை

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான கப்பல் சேவை கடந்த ஆண்டு அக். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் சில நாட்களிலேயே கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து வரும் 19-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக கப்பல் இம்மாதம் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *