சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் 300 கோடி வசூல் சாதனை

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான வணிகத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் ரூ. 300 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் ’எஸ்கே 23’ என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் விருந்து வைத்து அசத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *