ஷாருக் கான் நடித்த ஜவான்; நான்கே நாட்களில் 500 கோடியை கடந்த வசூல், அட்லியின் இயக்கத்தில் மற்றுமொரு வெற்றி

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் கடந்த செப்.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஷாருக்கானிற்கு முன்னதாக வெளியான ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இந்தப்படத்தையும் அவரது ரசிகர்கள் அதே வரிசையில் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
பரபரப்பாக இயங்கும் ஒரு நகரத்தில் மெட்ரோ ரயிலை ஷாருக் சில பெண்களுடன் ஹைஜேக் செய்கிறார். அதில் இருக்கும் பயணிகளை விடுவிக்க 40 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். அந்த பணம் எதற்கு? யாருக்காக அதை செய்கிறார்? அந்த கடத்தலில் ஈடுபடும் பெண்கள் யார்? அவர்களுக்கான பின்னணி என்ன? ஷாருக்கானின் கடத்தல் எங்கு சென்று முடிகிறது என்பதே ஜவான்.
ஜவான்’ திரைப்படம் முதல் நாளே ஹிந்தி திரை உலகில், மிகப்பெரிய ஓபனிங் கிடைத்த திரைப்படமாக மாறியது.மேலும் முதல் நாளே 129.6 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், ஜவான் படம் வெளிவந்து 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் படம் ரூ.520 கோடி வசூலை கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.