ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது; கரையை கடக்கும் பொழுது 90கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

இந்தியா இயற்கை பேரிடர் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வானிலை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் பலமணிநேரம் கடலிலேயே பயணித்தது. இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் புயலின் வேகம் படிப்படியாக குறைந்ததால், புயல் கரையை கடப்பது தாமதமானது. இதன் தாக்கம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இன்று காலை முதலே அதிகமான மழைப்பொழிவு இருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது ஃபெஞ்சல் புயலின் வெளிவட்ட பகுதி காரைக்கால் – மகாபலிபுரம் இடையே மாலை 5.30 மணிபோல் கரையை கடக்கத் தொடங்கியது என்றும், இதன்மூலம் புயல் கரையை கடக்கத் தொடங்கும் நிகழ்வு தொடங்கியது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயலின் கண் பகுதி கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ தொலைவில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாக்க இருக்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஃபெஞ்சல் புயல் தற்போது கடற்கரையில் இருந்து 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது புயலின் கண் பகுதி என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணிநேரத்துக்குள் புயலின் கண் பகுதி கரைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது கரையை கடக்கும்போது கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், மழை பொழிவும் இருக்கும், அதேநேரம் கரையை கடந்த பிறகு வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களின் உள்பகுதிகளில் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *