சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று கொடி விமர்சையாக ஏற்றப்பட்டது.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கோயில்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

உலகளாவிய புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று (ஜனவரி 4) கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம் என இரண்டு முக்கிய விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து, ஜனவரி 12ஆம் தேதி தேர் திருவிழா மற்றும் ஜனவரி 13ஆம் தேதி ஆருத்ரா அபேஷிகம் மற்றும் தரிசனம் நடைபெறும் என கோயில் நிர்வாக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கும் மாலை 6 மணிக்கு சித்சபை முன்பு மாணிக்கவாசகம் எழுந்தருளி திருவெம்பாவை உற்சவம் சிறப்பாக நடைபெறும் .மேலும் தேர் விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சதர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஆருத்ரா தரிசனத்தை காண பல ஊர்களிலிருந்து பல லட்ச பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையிடம் இணைந்து மேலும் பலப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *