ஓமன் வளைகுடா தாக்குதல்: மீட்கப்பட்ட 21 இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு.

இந்தியா உலகம் செய்திகள் போர் முதன்மை செய்தி

ஓமன் வளைகுடாவில் பலாவு நாட்டுக் கொடியுடன் பயணம் செய்த எம்டி செட்டில் பெல்லோ என்ற டேங்கர் கப்பல் மீது கடந்த 10-ம் தேதி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த நேரத்தில் கப்பல் ஓமன் கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்தது.இந்த தாக்குதலின் போது கப்பலில் இருந்த 24 பேரில் 3 மாலுமிகள் உயிரிழந்தனர். மீதமிருந்த 21 இந்திய பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஓமனில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.மீட்கப்பட்ட இந்தியர்களை விரைவில் தாயகம் அழைத்து வர இந்திய தூதரகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓமனுக்கான இந்திய தூதர் பிரசாந்த் பிசே நேற்று நேரில் சந்தித்து, அவர்களின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து கேட்டறிந்தார்.மேலும், இந்திய பணியாளர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சர்வதேச கடல் பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *