ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களில் விண்கற்கள் மழையாக பொழியும். இதற்கான காரணம் வால் நட்சத்திரங்கள் ஆகும். வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி பயணிக்கும்போது, அவை பூமியின் சுற்றுப்பாதையை கடந்து செல்லும் போது, தூசி மற்றும் சிறிய பாறைகளை விட்டுச் செல்கின்றன. பூமி இந்த தூசி துகள்களுக்கு அருகில் வந்தால், புவியீர்ப்பு விசையால் அந்த துகள்கள் பூமிக்குள் நுழைகின்றன. இதனால், வளிமண்டலத்தில் உள்ள தூசி துகள்கள் எரிந்து, விண்கல் மழை போல தோன்றுகிறது. இந்த ஆண்டு, விண்கல் மழை நாளை தொடங்க உள்ளது, இது டிசம்பர் 17 முதல் ஜனவரி 16 வரை நடைபெறும், ஆனால் ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் உச்சத்தை அடையும்,அதாவது நாளையும் நாளை மறுநாளும் வானில் நூற்றுக்கணக்கான விண்கற்கள் விழும். ஆனால், இது சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும். இதனை வெறும் கண்ணால் மட்டுமே காண முடியும் என்பது கூடுதல் சிறப்பு.இந்த விண்கற்கள் மணிக்கு சுமார் 14.8059 கிமீ வேகத்தில் பூமியுடன் மோதுகின்றன. நமது வளிமண்டலத்தில் அதிக அளவில் ஆக்ஸிஜன் இருப்பதால், அவை தாக்கத்தின் வேகத்தில் தீப்பிடித்து எரிந்து சாம்பலாக மாறுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 120 விண்கற்கள் பூமியில் நுழைகின்றன. பொதுவாக, சில விண்கல் நிகழ்வுகள் வெளிநாடுகளில் மட்டுமே காணப்படும், ஆனால் இந்த விண்கல் மழையை நாம் இந்தியாவில் இருந்தே காணலாம். சென்னையில் ஒளி மாசுபாடு அதிகமாக இருப்பதால், இங்கு தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பார்த்தால், வானம் தெளிவாகக் காணப்படும். வைனு பாப்பு விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகில் உள்ள இந்த இடத்தில் ஒளி மாசுபாடு குறைவாகவே உள்ளது, எனவே அங்கு இருந்து விண்கல் மழையை அழகாக அனுபவிக்கலாம். ஆய்வகத்திற்கு சென்று கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை; அங்கு உள்ள இடத்தில் நின்று, வெறும் கண்களால் வானத்தைப் பார்த்தால், விண்கல் மழையை ரசிக்க முடியும். திருப்பத்தூர் மட்டுமல்லாமல், சென்னையைச் சுற்றியுள்ள பிற இடங்களிலும் ஒளி மாசு குறைவாக உள்ள பகுதிகளில் இருந்து இதைப் பார்க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

