பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்ட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு; மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு

இந்தியா கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் எந்தெந்த தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜனவரி 16 ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. மாடுபிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறை மூலமாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கும் முன் தீண்டாமை உறுதி மொழி ஏற்பது குறித்து பரிசீலனை செய்ய அரசுக்கு நீதிமன்றம் ஆணை இட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழர்களின் இன்றியமையாத பண்டிகையாக அவர்களின் வாழ்வில் கலந்துள்ளது. பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து புது பானை வைத்து பொங்கல் பொங்கி சொந்த பந்தங்களுடன் கொண்டாடி மகிழ்வதே ஒரு தனி சுகம் என்றே சொல்லலாம்.
ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையின் மணிமகுடம் என்றே சொல்லலாம். பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக விளையாடப்படும் மிகவும் பாரம்பரியமான மற்றும் ஆரவாரமான விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு முக்கியமான ஒன்று ஆகும். ஜல்லிக்கட்டு இன்று நேற்று தோன்றியதல்ல மிகவும் பழமையானது.
நீலகிரி மாவட்டம் கரிக்கியூர் கிராமத்தில் மக்கள் காளைகளை துரத்தும் காட்சிகள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான கல் பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள கல்லுட்டு மேட்டுப்பட்டியில் 1500 ஆண்டுகள் பழமையான கல் பலகை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது போன்ற குறிப்புகளே ஜல்லிக்கட்டுப் போட்டி மிகவும் பழமையான வீர ளையாட்டு என்பதற்கு சான்றாக விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *