அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா; தமிழக அமைச்சரவையில் மாற்றம்

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியை தொடர்வதில் சிக்கல் எழுந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமைச்சர் பதவியா? அல்லது ஜாமீனா? என்பதை 28ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதனால், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பொறுப்பில் எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என எதிர்பாரக்கப்பட்டது.
இதேப்போன்று வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அண்மையில் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தன. பொன்முடியின் பேச்சையடுத்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. எனினும், அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ராஜினாமா செய்துள்ளனர். இவர்களது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள தமிழக அரசு அவர்கள் பொறுப்பு வகித்த இலாகாவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, செந்தில் பாலாஜி வகித்துவந்த மின்சாரத் துறை, அமைச்சர் சிவசங்கருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், செந்தில் பாலாஜி வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் பொன்முடி வசம் இருந்த வனத்துறை, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜிற்கு எந்த துறை என்று பின்னர் அறிவிகப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *