தமிழகத்தில் Tnpsc குரூப் 4 தேர்வு, இளநிலை உதவியாளர் மற்றும் விஏஓ போன்ற பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. 3,935 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிசி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

