டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிப்பு.

இந்தியா ஐபிஎல் தொடர் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விளையாட்டு

ரோகித் சர்மாவை தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் கடினமான முடிவை தான் எடுத்துள்ளதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது மிகவும் கடினமான முடிவாகும்.. கடினமான முடிவாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதயப்பூர்வமான நன்றி உணர்வுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். என பதிவிட்டுள்ளார். 2011ல் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய விராட் கோலி. கடைசியாக கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள் உள்பட 9230 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்ததே கோலியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதில் 7 இரட்டை சதங்கள், 30 சதங்கள், 31 அரை சதங்கள் அடங்கும். ரோகித் சர்மா, விராட் கோலி என இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *