தக் லைப் படத்தில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் இணைப்பு படக்குழு அறிவிப்பு.

இந்தியா சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு பொழுதுபோக்கு விளம்பர செய்திகள்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தக் லைப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘தக் லைப்’ ஆல்பத்தில் 10-வது பாடலாக சின்மயி வெர்ஷன் இணைக்கப்பட்டுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *