வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு ஐரோப்பிய நாடுகளை முந்திவிட்டது என்ற நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. வறுமையை ஒழிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பல பரிமாண வறுமை குறியீட்டு அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் வறுமை குறியீடு 2.20 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இது பல வளர்ந்த நாடுகளைவிட குறைவானது ஆகும் .இந்த வறுமை குறியீடு பட்டியலில் இத்தாலி நாட்டில் 2.39% ஆகவும் ஸ்வீடன் நாட்டில் 2.42% ஆகவும் ஸ்பெயின் – 3.46%, லக்சம்பர்க் – 4.19%, பிரேசில் – 4.29%, அயர்லாந்து – 15.06 ஆகிய நாடுகளின் வறுமை குறியீடு அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக உலகளாவிய பொது விநியோகம், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மதிய உணவு திட்டம், பொது சுகாதாரம் மற்றும் கல்வி, நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துதல் ஆகியவையே வறுமை குறைவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

