புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையத்தில் கொடுக்கப்படும் விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது; சென்னை உயர்நீதிமன்றம்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் நீதி மன்றம் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

புதிதாக வெளியாகும் படங்கள் குறித்து மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நேர்மறையான விமர்சனங்களை மட்டும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கக்கூடாது என்றும், ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்வது என்பது, பேச்சு சுதந்திரத்துக்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் என்றும் என்று கூறியதுடன், திரைப்படங்களை விமர்சனம் செய்ய தடை விதிக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.
இன்றைக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்வது என்பது அதிகமாக உள்ளது. எந்த பாடமும் நன்றாக இருக்கிறது என்று ஆன்லைன் விமர்சகர்களிடம் சான்றிதழ் வாங்க முடிவது இல்லை. படம் நன்றாக இருக்கிறது என்ற விமர்சனங்களைவிட, படம் நன்றாக இல்லை என்ற விமர்சனங்களேஅதிகமாக உள்ளது. அதேபோல் படத்தை விமர்சனம் என்ற பெயரில் கழுவி ஊற்றுவது அதிகரித்துள்ளது. ஒரு நடிகரின் படத்தை விமர்சனம் என்ற பெயரில் ஓடவிடாமல் செய்வது அதிகமாக நடக்கிறது.
புதிய படங்கள் வெளியாகும் போது,அந்த படங்கள் குறித்து மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையாகும் . இதில் சமூக வலைதளங்களில் பட தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது. சினிமா விமர்சனங்களை தடை செய்வது என்பது, பேச்சு சுதந்திரத்துக்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் ஆகும். இதனை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மனுதாரர்கள் கேட்டுள்ள நிவாரணம் ஏற்க முடியாதது. அதனை நீதிமன்றம் வழங்க முடியாது.
இன்றைய உலகம் சமூக வலைதளங்களின் பிடியில் உள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சனத்தில் இருந்து தனி நபர்கள்/ அமைப்புகள்/ எந்த நாடும் தப்பிக்க இயலாது. இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்பது சமூக வலைதள காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். மக்கள், படங்களை பார்த்த பிறகே அது குறித்து முடிவு செய்ய வேண்டும். படங்கள் குறித்து மற்றவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்யக்கூடாது ” இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *