குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினமா செய்தார். இதை அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் NDA கூட்டணி சார்பில், தமிழகத்தைச் சேர்ந்தவருான சி.பி. ராதா கிருஷ்ணன் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 9-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், சி.பி. ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, 15வது துணை குடியரசு தலைவராக இன்று சி. பி ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *