நியூயார்க் திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் திரைப்படம் அங்கம்மாள்

அமெரிக்கா இசை இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பெண்கள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா

சமீபத்திய நியூயார்க் இந்திய திரைப்பட விழா ( New York Indian Film festival – NYIFF ) 2025 இல், சிறந்த நடிகைக்கான பரிந்துரையை கீதா கைலாசமும், சிறந்த திரைப்படத்திற்கான பரிந்துரையை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய ‘அங்கம்மாள்’ திரைப்படமும் பெற்றிருந்த நிலையில், அவ்விழாவின் சிறந்த திரைப்படமாக அங்கம்மாள் தமிழ் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘ கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்றை திரைப்படமாக எடுத்து, அது குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை பெறுவதும் பெருமைக்குரியது என படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இப்படத்தில் அங்கம்மாள் என்ற கதாப்பாத்திரத்தில் கீதா கைலாசம், அவருடன் இணைந்து வடசென்னை, மெய்யழகன், உள்ளிட்ட படங்களில் நடித்த சரண், நாடோடிகள் படத்தில் நடித்த பரணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *