345 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 முதன்மை செய்தி

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 6 ஆண்டுகளுக்குள் ஒரு முறை ஏதாவது ஒரு தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி, தேர்தலில் போட்டியிடாவிட்டால் அந்த கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும். இதன்படி, கடந்த 2019 முதல் இதுவரை தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இந்த கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் பணி தொடங்கி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 2,800-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில், பல கட்சிகள் தங்களின் அத்தியாவசிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன என்பது ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே, இக்கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *