கேரளாவில் வேகமாக பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு; நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என சுகாதார துறை எச்சரிக்கை

ஆரோக்கியம் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வினோதங்கள்

கேரளாவில் நேக்லேரியா ஃபவுலேரி, சேப்பினியா பேடேட்டா அமீபா மூளையைத் தாக்கி 41 பேர் பாதிப்பு, அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு அறிவுறுத்தல்.
கேரளாவில் பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்நிலைகளைப் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேக்லேரியா ஃபவுலேரி மற்றும் சேப்பினியா பேடேட்டா ஆகிய அமீபாக்களால் மனிதர்களுக்கு அமீபிக் மெனிஞ்சோ செபலைட்டிஸ் (amoebic meningoencephalitis) என்ற பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த அமீபாக்கள் வெதுவெதுப்பான நன்னீரில் வாழக்கூடியவை. மனிதர்களின் உடலில் மூக்கின் வழியாக நுழையும் இந்த அமீபா முதலில் மூளையைத் தாக்கி பின்னர் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
காய்ச்சல், தலைவலி, குமட்டல், குழப்பம் உள்ளிட்டவை இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். இதனால் நடப்பாண்டு மட்டும் இதுவரை 41 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது.
இதுகுறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை கேரள அரசு நடத்த உள்ளது. வரும் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் இந்த பிரச்சாரம் நடைபெற உள்ளது. கிணறுகள், தண்ணீர் டேங்க் உள்ளிட்டவற்றை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகள் மட்டுமின்றி ஓட்டல்கள், மருத்துவமனைகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களைக் குளோரின் ஊற்றி சுத்தமாக வைத்திருக்கவும் கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், குளம், குட்டை உள்ளிட்டவற்றில் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *