இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். அதே போல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசாம் இப்புதிய சட்டத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம், கலிபோர்னியாவில் இயங்கும் பொதுப் பள்ளிகள் மற்றும் சமூகக் கல்லூரிகள் தீபாவளி அன்று விடுமுறை அளிக்கலாம்.மேலும், அரசு ஊழியர்கள் இந்த பண்டிகையை கொண்டாட விரும்புவோருக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இந்த சட்டம் இரு கட்சி ஆதரவுடனும், மக்களிடையே நடந்த தொடர் முயற்சிகளாலும் நிறைவேறியுள்ளது. ஏற்கனவே, பென்சில்வேனியா, கனெக்டிகட் மாகாணங்களில் தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

