ரசிகர்கள் அன்பால் திக்குமுக்காடிப் போன கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி; இந்தியா மீண்டும் வருவேன் என விருப்பம்

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தென் அமெரிக்கா நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்றுடன் அவர்களின் பயணம் முடிவடைந்து அவர்கள் புறப்பட்டனர். 3 நாள் சுற்றுப்பயணத்தில் முதாவதாக கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார். அவரை கண்குளிர பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *