டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு முக்கியமான ஒரு புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இனிமேல், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC – Pollution Under Control Certificate) உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்படும். இந்த விதிமுறை வியாழக்கிழமை முதல் அமலில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது. டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

