போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 40 வயதுக்கு உட்பட்ட 40 இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நிகில் காமத் இடம்பிடித்துள்ளார். இளம் தொழில் முனைவோர் எவ்வாறு தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் மூலம் பெரிய செல்வத்தை உருவாக்குகிறார்கள் என்பதை காட்டும் வகையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில், 39 வயதான ஸெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியான நிகில் காமத், 3.3 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் 20-ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நிகில் காமத்துடன் சேர்த்து, மொத்தம் 4 இந்திய வம்சாவளி தொழில் முனைவோர் இடம் பெற்றுள்ளனர்.

