அஇஅதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என தலைமை கழகம் அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அதன்படி, 18ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு 26ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 27ம் தேதி நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விரும்புவோர், தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.