துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால்; கட்டணம் குறித்த தகவல்

அரபு நாடுகள் உலகம் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் இதுபோன்று ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால், இந்த கட்டடத்திற்கு உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும்.
துபாயில் வானளாவிய உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தை பார்க்க உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இந்த கட்டடத்தில் நிறைய வர்த்தக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்புகள் இருக்கின்றன. எனவே, தங்கள் நிறுவனம் தொடர்பான விஷயங்கள் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க விரும்பும் நிறுவனங்கள் இந்த புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்கின்றன.
புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால், இந்த கட்டடத்திற்கு உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். ஏனெனில், எவ்வளவு நேரம் விளம்பரம் ஓடுகிறது, எப்போது ஓடுகிறது என்பதை பொறுத்து தொகை மாறுபடும். இருப்பினும், 3 நிமிடம் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்ய தோராயமாக 68,000 டாலர் செலவழிக்க வேண்டும்.
அதாவது, இந்திய மதிப்பில் ரூ.57 லட்சம். வார இறுதி நாட்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை விளம்பரத்தை வெளியிட நினைத்தால், 95,000 டாலர் அதாவது, ரூ.80 லட்சம் கொடுக்க வேண்டும். வார இறுதி நாட்களில் நள்ளிரவில் விளம்பரத்தை வெளியிட ரூ.2.27 கோடி வரை கட்டணம் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *