எக்ஸ் தளத்தில் 100 மில்லியன் அதாவது, 10 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்ஸை பெற்று பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
எக்ஸ் தளத்தில் அதிகம் பின் தொடரப்படும் உலக தலைவர் என்ற சாதனையையும் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
உலக நாடுகளின் தலைவர்களுடன் ஒப்பிடும்போதும் பிரதமர் மோடிதான் முன்னிலையில் இருக்கிறார். 38.1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தற்போதைய துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது (11.2 மில்லியன்) மற்றும் போப் பிரான்சிஸ் (18.5 மில்லியன்) போன்ற உலகத் தலைவர்களை விட பிரதமர் மோடி மிகவும் முன்னிலையில் உள்ளார்.
X இல் பிரதமர் மோடியின் பிரபலத்தைப் பார்த்து, உலகத் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் சமூக ஊடகங்களில் ஈடுபட ஆர்வமாக உள்ளனர், ஏனெனில் அவருடன் தொடர்புகொள்வது அவர்களின் சொந்த பின்தொடர்பவர்கள், ஈடுபாடுகள் (Impression), பார்வைகள் (Views) மற்றும் மறுபதிவுகளை (RePost) கணிசமாக அதிகரிக்கிறது.
விராட் கோலி (64.1 மில்லியன்), பிரேசிலிய கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் (63.6 மில்லியன்) மற்றும் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (52.9 மில்லியன்) போன்ற சில ஆக்டிவான உலகளாவிய விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடும்போது, பிரதமர் மோடிக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

