தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்த 31 வயதான ரினி சம்பத், வாஷிங்டன் DC மேயர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். பிப்ரவரி 18ஆம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கிய அவர். “அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து, நகர நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பேன்” என கூறினார்.தமிழ்நாட்டில் பிறந்த அவர், 7 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார் . 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாஷிங்டன், DC நகரத்தில் வசித்து வரும் அவர் contractor ஆக பணிபுரிகிறார். போட்டியில் வெற்றி பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்டமைப்பு மேம்பாடு, பொதுப் பாதுகாப்பு சேவைகளின் விரைவான செயல்பாடு, வாழ்வாதார செலவை குறைத்தல் மற்றும் அத்தியாவசிய நகர சேவைகளை மேம்படுத்தல் ஆகியவற்றில் விஷயங்களில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். மேலும் “அடிப்படைகளை சரி செய்வோம், நம் பகுதிகளை வலுப்படுத்துவோம், வாழ்வு செலவை குறைப்போம் போன்றவை அவரது தேர்தல் முழக்கமாக உள்ளது.

