டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு . க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில், அவர்கள் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சியுடன் பேசப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.இந்த சந்திப்பின் புகைப்படங்களை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த “ஸ்பின் ட்வின்ஸ்” வீரர்களுடன் சந்தித்தது மறக்க முடியாத தருணம் என கூறினார். மேலும், அவர்களின் விடாமுயற்சி மற்றும் கட்டுப்பாடு நிறைந்த பயணம் குறித்து கலந்துரையாடியதாகவும், வருங்காலங்களில் இன்னும் பல வெற்றிகளையும் பெருமை தரும் தருணங்களையும் பெற வாழ்த்துகள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

