தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைவருக்கும் ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இன்னும் நேரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வதையே விரும்புகின்றன. மேலும், சமூகவலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்களை கட்டுப்படுத்த ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன என்றும் தெரிவித்தார்.மேலும், வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி குறித்து அவர் கூறுகையில், மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் அந்த காலத்தில் வரும் சனி மற்றும் ஞாயிறு (ஏப்ரல் 4, 5) நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது. இதனால், மொத்தம் 6 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

