தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை தெரிவித்த நிலையில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மைக்காக மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. இதையடுத்து தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதுடன், பெரும்பான்மை ஆதரவு பட்டியலையும் சமர்ப்பிக்க தயாரானார்.இந்த நிலையில் சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, விசிகவும் தனது ஆதரவை தெரிவித்தது. இதன் மூலம் தவெகவுக்கு மொத்தம் 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. தேவையான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை கடந்ததால், விஜய் தலைமையிலான புதிய அரசு நாளை பதவியேற்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

