பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 95.2% பேர் தேர்ச்சி

கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சிறப்பு செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு தமிழ்நாடு முதன்மை செய்தி

தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 95.20% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 97% தேர்ச்சி பெற்று மீண்டும் முன்னிலை பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.19% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.81% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தம் 7,536 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 2,639 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 489 அரசு பள்ளிகள் இடம்பெற்றுள்ளன. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு (98.87%), சிவகங்கை (98.05%), கன்னியாகுமரி (97.63%) ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. இந்த ஆண்டு மார்ச் 2 முதல் 26 வரை நடைபெற்ற தேர்வில் 8.27 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள் திருத்தப் பணிகள் நடைபெற்று இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *