ஆப்பிரிக்கா நாடுகளில் பரவும் எபோலா வைரஸ் ; உயிரிழப்புகள் 131ஆக அதிகரிப்பு

ஆப்ரிக்க நாடுகள் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தொற்று ஏற்பட்ட ஒரு மனிதரிடமிருந்து இரத்தம், உமிழ்நீர், வியர்வை, சிறுநீர், வாந்தி அல்லது விந்து போன்ற உடல் திரவங்க மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இது எபோலாவின் அரிய வகை புண்டிபுக்யோ வைரஸ் என அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற அருகிலுள்ள நாடுகளுக்கும் இந்த நோய்ப் பரவும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் இதூரி மாகாணத்தில் பரவி வந்த எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, 513 பேருக்கு சந்தேகத்திற்குரிய வகையிலான தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆன்டனியோ டெட்ரோஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், எபோலா வைரஸ் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது என்றார். இதற்கு காரணம் பண்டிபக்யோ என்ற வைரஸ் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசுக்கு நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை. தொடர்ந்து காங்கோவில் மருத்துவ பரிசோதனைகளும் நடந்து வருகின்றன.

Ebola risk raised to ‘very high’ in DR Congo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *