கரூர் கூட்ட நெரிசல் உயிரிழந்த குடும்பங்களில் 31 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

அரசியல் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு தமிழ்நாடு முதன்மை செய்தி

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தமிழக வெற்றி கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பங்களில் 31 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினார்.பள்ளிக்கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல்துறை, பதிவுத்துறை, பேரூராட்சிகள் துறை மற்றும் சமூக நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் இந்த பணிநியமனங்கள் வழங்கப்பட்டன.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்கும் என்றும், அவர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *