வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஷேக் ஹசீனா, நாடு திரும்பிய உடனேயே கைது செய்யப்படுவார்; சட்ட அமைச்சர் தகவல்

அரசியல் உலகம் செய்திகள் நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஷேக் ஹசீனா, நாடு திரும்பிய உடனேயே கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டின் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது உயிருக்கு ஆபத்து உள்ளபோதிலும் டிசம்பர் மாதத்திற்குள் வங்கதேசத்திற்கு திரும்ப உள்ளதாக அண்மையில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா, நாடு திரும்பிய உடனேயே கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டின் சட்ட அமைச்சர் எம். அசாதுஸ்ஸமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது : மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும், வங்காளதேசக் குடிமகளாகிய ஷேக் ஹசீனா நாடு திரும்பி சரணடைய விரும்பினால், அவர் அதைச் செய்வதற்கு முன்பே கைது செய்யப்படலாம். சட்டம் எங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை நாங்கள் செயல்படுத்துவோம். அவர் எப்போது எங்கள் எல்லைக்குள் நுழைகிறாரோ, அப்போது சட்டம் எனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை நான் செயல்படுத்துவேன்.
வங்காளதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவர்கள் தலைமையில் பெரும் போராட்டம் நடைபெற்றது. வன்முறை வெடித்த இப்போராட்டங்களின் அப்போதைய ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. அப்போது முதல் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
மாணவர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி ஹேக் ஷசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தது. தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார்.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரி இந்தியாவை வங்கேதேசம் வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை பரிசீலித்து வருவதாக இந்தியா கூறி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *