கூகுள் பே-ல் இனி பணம் அனுப்பினால் GST உடன் காசு பிடிக்கபடும் என அறிவிப்பு. இந்தியாவில் கூகுள் பே இனி இலவசம் இல்லை. பில் கட்டணங்களுக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் GST உடன் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் எளிதில் பயன்படுத்தக்கூடிய பரிவர்த்தனையாக யு.பி.ஐ, கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM ஆகியவற்றில் OTT சந்தாக்கள், காப்பீட்டு பிரீமியங்கள், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், மொபைல் போன் ரீசார்ஜ் என அனைத்து பரிவர்த்தனைகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கூகுள் பே, மின்சாரம், எரிவாயு போன்ற பில் கட்டணங்களுக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது. பரிவர்த்தனை தொகை மதிப்பில் 0.5% முதல் 1% வரையில் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கபடும் . டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூகுள் பே கடந்த ஆண்டு முதலே மொபைல் போன் ரீசார்ஜ் கட்டணத்திற்கு 3 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

