உக்ரைனில் ஆயுத ஆலைகள் அமைத்தால் தாக்குதல் நடத்தப்படும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை

அரசியல் உக்ரைன் உலகம் ஐரோப்பா செய்திகள் போர் ரஷ்யா

உக்ரைனில் மேற்கத்திய நாடுகள் ஆயுத உற்பத்தி ஆலைகளை அமைத்தால், அவற்றை தாக்கி அழிக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உக்ரைனில் நீண்டதூர ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை ரஷ்யா உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே ஆயுதங்கள், ராணுவ உதவிகள் மற்றும் நிதி ஆதரவை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், உக்ரைனிலேயே ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டால், அது போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்களிப்பை அதிகரிக்கும் என ரஷ்யா கருதுகிறது.ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ஆயுத உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *