பயிற்சியின்போது காயம்; ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்

இந்தியா உலகம் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

நீரஜ் சோப்ரா உள்பட 492 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கொண்ட இந்திய அணியை விளையாட்டு அமைச்சகம் இந்த மாதம் தொடக்கத்தில் அறிவித்தது. இதில் நீரஜ் சோப்ரா இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில் நீரஜ் சோப்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒரு காலகட்ட கடின உழைப்பிற்குப் பிறகு, லோசானில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் மூலும், நான் எதிர்பார்த்திருந்த உத்வேகத்தை இறுதியாகப் பெறுவதாக உணர்ந்தேன்.
துரதிர்ஷ்டவசமாக, சிறிது காலத்திற்குப் பிறகு பயிற்சியின் போது எனது கணுக்காலில் தசைநார் கிழிவு (ligament tear) ஏற்பட்டது. எனது மருத்துவர் மற்றும் அணியினருடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் நான் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக, எனது ஆட்டத்தின் சீரான ரிதத்தை கண்டறியும் நிலைக்கு நான் நெருங்கியிருந்த நிலையில் இது நிகழ்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும், சொல்வது போல, தடைகளும் பின்னடைவுகளும் பயணத்தின் ஒரு பகுதிதான். இப்போது நான் முழுமையாகக் குணமடைந்து, இன்னும் வலிமையுடன் மீண்டு வருவதிலேயே கவனம் செலுத்தி வருகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் அனைவருக்கும் நன்றி”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *