செப்.11-ல் டெல்லி வருகிறார் ரஷ்யா அதிபர் புதின்! பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு

அரசியல் இந்திய வணிகம் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம் ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் 11-ம் தேதி டெல்லி வருகிறார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் அவர், அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இந்த சந்திப்பில் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, அணுசக்தி, விண்வெளி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.குறிப்பாக, இந்திய விமானப்படைக்கு ரஷ்யாவின் அதிநவீன எஸ்.யு.57 போர் விமானங்களை வாங்குவது மற்றும் அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவுக்கு வழங்க வேண்டிய எஸ்-400 ஏவுகணைகள், கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம் மற்றும் ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவில் புதிய அணுமின் நிலையம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தியா–ரஷ்யா இணைந்து தயாரிக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச உள்ளனர்.இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், ரூபாய் பணப் பரிமாற்றத்தில் உள்ள சிக்கல்கள், விமானப் போக்குவரத்தை அதிகரிப்பது மற்றும் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் அதிபர் புதின், பிரதமர் மோடியிடம் விளக்க உள்ளதாக பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *