ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஒன்று இயற்கை ஆர்வலர்களை கவரும் வகையில் வித்தியாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், உலகப் புகழ்பெற்ற Northern Lights எனப்படும் வடதுருவ ஒளியை ரசித்தபடியே வேலை செய்யும் வாய்ப்பைப் பெறலாம்.
இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மான்களை பராமரிப்பது, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவது, சுற்றுலா நடவடிக்கைகளில் பங்கேற்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இயற்கை மற்றும் வனவிலங்குகள் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வேலை ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பணியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இயற்கை சூழலில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

